Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 மே 12 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதிக் கட்ட யுத்த காலத்தில், ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கிய போது, அவர்களுடைய உணவாக கஞ்சியே இருந்தது.
இந்தக் கஞ்சியை, வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தும் முகமாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (12) தொடரக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து இதனை முன்னெடுக்கின்றன.
“கஞ்சி பரிமாறுவோம்; முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” எனும் தலைப்பில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில்… (படங்கள் - சண்முகம் தவசீலன்)
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள், யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகிலும் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை வளாகத்துக்கு அருகிலும் இன்று (12) இடம்பெற்றன.
பாதுகாப்புக் கடமைகளுக்கு வருகை தந்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வாளர்களுக்கு முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில்… (படங்கள் - வா.கிருஸ்ணா)
வட,கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து கஞ்சி காய்ச்சப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
49 minute ago
55 minute ago