2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘விருசுமித்துறு’

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் ‘விருசுமித்துறு’ நிகழ்வு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில், அலரிமாளிகையில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. 

உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைவீரர் குடும்பங்களின் வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் நோக்குடன், 3,650 வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது ஆலோசனைக்கமைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவின் நெறிப்படுத்தலில் அமுல்படுத்தப்படும் ‘விருசுமித்துறு’ வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 192 வீடுகள் படைவீரர்களுக்கு உரித்தளிக்கப்பட்டன.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ரணவிரு சேவை அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X