2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு வீதி நாடகம்

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான வீதி நாடகமும் விழிப்புணர்வுப் பேரணியும் நோர்வூட்டில், நேற்று (25) நடைபெற்றது.

இதன்போது நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 1,000 மாணவர்கள், போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பாதாதைகளை ஏந்தியவாறு, நோர்வூட் நகரில் ஊர்வலமாகச் சென்றதுடன், நகரின் இரண்டு இடங்களில் வீதி நாடகத்தையும் அரங்கேற்றினர்.

போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள், அவற்றைத் தடைச் செய்வதற்கு, மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள்,  இந்த வீதி நாடகத்தின் கருப்பொருளாக அமைந்திருந்தன.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதாரப் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X