2025 மே 22, வியாழக்கிழமை

விழிப்புணர்வு…

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலம், அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும், அதிபர் ஏ.எம். மிஸ்பர் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்து, பதாதையில் கையொப்பங்கள் இடப்பட்டன.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக பொறுப்பதிகாரி ஆர்.ஏ. திலக்புஸ்பகுமார, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.றமீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.

(படப்பிடிப்பு: ரீ.கே. றஹ்மத்துல்லா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .