2025 மே 21, புதன்கிழமை

வீடுகள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள்,   தங்களுக்கு வீடுகள் வேண்டுமெனக்கோரி, ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் இன்று (03) ஈடுபட்டனர்.

திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட மக்கள், திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் கலந்துரையாடியதன் பின்னர், நடைபவணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை அடைந்தனர்.

அங்கு, தங்களுக்கு இலகு வீட்டுத் தட்டம் வேண்டுமெனக் கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு, ஆளுநரின் செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த தாங்கள், யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கழிந்த பின்னரும், இன்னமும் தற்காலிகக் கூடாரங்களிலும் ஓலைக் குடிசைகளிலுமே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இவ்வாறு வாழ்ந்துவருவதாக, அந்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .