Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2021 ஜூலை 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹல்தும்முல்ல- வள்ளப்பத்தனை பிரதேசத்தில் காரொன்று வீதியை விட்டு விலகி, வீதியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (29) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதுடன், இவர்கள் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து, ஹல்தும்முல்ல பகுதிக்கு குறித்த காரில் சுற்றுலா வந்த சிலர், பம்பரகல நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட பின்னர், மீண்டும் மாத்தறைக்கு திரும்பிய போதே, இந்த விபத்தை சந்தித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago