2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வான் கதவுகள் திறப்பு...

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

கடற்படையினரின் பொறியியற் பிரிவின் உதவியுடன் இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பெருமளவான நீர் குளத்துக்கு வந்தமையால் குளத்தின் கொள்ளளவான 34 அடிக்கு நீர் அண்மித்ததையடுத்து, வான் கதவுகள் திறந்து விடப்பட்டன.

வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையால், அந்தப் பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .