2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: ஒருவர் பலி; மூவர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி.  மாத்தளை ஏ-9 வீதி அக்குறணை ஏழாம் கட்டையில், மூன்று வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மஹாவலி அதிகார சபைக்குச் சொந்தமான ஜீப் வண்டி,  மற்றுமொரு ஜீப் வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது,  அக்குறணை  திசையிலிருந்து  வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதுடன் ஜூப் வண்டியிலும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான அக்குறணை நீரெல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஜலால்தீன் முஹம்மத் அலி என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன்  ஜீப் வணடியில் பயணித்த இரு பெண் உட்பட மூவர் கடுங்காயங்களுக்கு உள்ளான  நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X