2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்து..

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் மின்னேரி பொலிஸ் பிரிவிலுள்ள கிரித்தலை எனுமிடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்கு கீழ் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெறும்போது லொறியின் சாரதியும் உதவியாளருமே குடைசாய்ந்த அந்த லொறியில் பயணித்துள்ளனர். எனினும், இருவரும் எதுவித காயங்களுமின்றித் தப்பியுள்ளனர்.

பொலன்னறுவையிலிருந்து சென்றுகொண்டிருந்த லொறி திடீரெனத் தடம் மாறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையின் மறுபக்கத்தில் இருந்த பாலத்தின் தூணையும் பிடுங்கிக்கொண்டு பாலத்துக்கு கீழ் விழுந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .