2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விழிப்பூட்டல் பேரணி...

Princiya Dixci   / 2016 நவம்பர் 01 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களை விழிப்படையச்செய்வதற்கான விழிப்பூட்டல் பேரணியொன்று, செவ்வாய்க்கிழமை (01) காலை, புத்தளம் நகர மத்தியில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்றிட்டத்தின் கீழ் நாடளாவியரீதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் மின்னியல்  உபகரணகளைச் சேகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாகப் புத்தளத்தில் நடைபெற்ற இந்த விழிப்பூட்டல் பேரணியை புத்தளம் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஏற்பாடு செய்திருந்தது.

பாடசாலை மாணவர்களோடு புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.என். சித்ரானந்தா, புத்தளம் கல்வி வலயத் தமிழ் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. சன்ஹீர் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

புத்தளம், கொழும்பு முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்பூட்டல் பேரணி, புத்தளம் - குருநாகல் வீதியூடாக நகர சபை வேலைத்தளத்தை வந்தடைந்தது. (படப்பிடிப்பு: எம்.யூ.எம்.சனூன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .