Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், காமினி பண்டார
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் நிலம் தாழிறங்கியதன் காரணமாக குடியிருப்பொன்று முற்றாக மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும் அப்பகுதியலுள்ள குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
கினிக்தேனை, புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக, அப்பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளில் நிலம் தாழிறங்கும் அபாயாம் தோன்றியுள்ளதாகவும் இதனால் தமது வீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025