2025 மே 26, திங்கட்கிழமை

50 அடி பள்ளத்தில்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயாவில் இன்று சனிக்கிழமை (20) காலை 10.30க்கு, டிப்பர் ரக வாகனமொன்றை, வீதியோரத்தில் நிறுத்தி வைக்க முற்பட்ட வேளையில் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து 50 அடிப் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்தில் டிப்பர் ரக வாகனம் மோதியதில் டிப்பென்டர் வாகனமும் சேதமாகியுள்ளது.

டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக நானுஓயாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(படங்கள்: எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X