2025 ஜூலை 31, வியாழக்கிழமை

3ஆவது நாளாகவும்…

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில், 3ஆவது நாளாகவும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டு தொடக்கம் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, தமக்கான பட்டதாரி நியமனங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி    சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(படப்பிப்பு: தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .