2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

நினைவுதினம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள அவரது கல்லறைக்கு அருகில் நேற்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவுதின நிகழ்வில் அவரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தி, சுடர் ஏற்றப்பட்டது.

இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த அவர்,  ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .