Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான நேற்றுத் திங்கட்கிழமை, கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களின் தெரு நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர்-செங்கலடி எல்லையிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம், செங்கலடி பொதுச் சந்தையில் முடிவடைந்தது.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், சிறந்த நூலகங்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் செங்கலடி பொது வாசிகசாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு மற்றும் ஐயங்கேணி நூலகம் ஆகியவை சிறந்த வாசிகசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் பெற்றன.
வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற இக்காலகட்டத்தில், வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொண்டு ஆக்கபூர்வ அறிவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதால், இத்தகைய வீதி நாடகமும் விழிப்புணர்வும் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதாக சிவராணி தெரிவித்தார்.
ஊர்வலத்தில் நூலகர்கள், கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும்; பிரதேச செயலகம் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளும் பங்குபற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago