2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

15 வயது மாணவி உலக சாதனை

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் 10ம் வகுப்பில் கல்வி கற்று

வரும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி 8 மணி 30 நிமிடங்களில் 54கிலோ மீற்றர் தூரத்தினை நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

நாவலப்பிட்டிய காவல் நிலையத்தின் முன்னால் காலை 06:05 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சோழன் உலக சாதனை படைப்பதற்கான நடைப் பயணம், கினிகத்தோன, வட்டவளை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவ நகரங்கள் ஊடாக, பகல் 02 மணி 35 நிமிடங்களில் பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் நிறைவடைந்தது.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் மற்றும் கண்டி மாவட்டப் பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் போன்றோர்.

சோழன் உலக சாதனைப் படைத்த மாணவிக்கும் அவரது மூன்று சகோதரிகளுக்கும் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X