Janu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டிய, நிகழ்வுகள் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, கேக் வெட்டப்பட்டு, இரண்டு இலட்சினைகள், பாடல் என்பன வெளியிடப்பட்டதுடன், கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டதுடன், தென்னிந்தியத் திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
எம்.றொசாந்த்



15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025