2025 மே 21, புதன்கிழமை

27ஆவது ஆண்டு நினைவேந்தல்…

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட  27ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (20) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் இராணுவ சீருடை தரித்தவர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள  நினைவுத் தூபியில் மலர் மாலை அணிவித்து மெளுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் விசேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றன.

(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .