Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது, 100, 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஜமைக்காவின் ஷெலி-அன் பிறேஸர்-பிறைஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற, பிரித்தானியத் தலைநகர் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ், கட்டார் தலைநகர் டோஹாவில் இவ்வாண்டு நடைபெற்ற தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் உலக தடகள சம்பியன்ஷிப்களிலும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில், பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கவனஞ் செலுத்தும் பொருட்டு 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருக்காத நாளை 33 வயதாகும் ஷெலி-அன் பிறேஸர்-பிறைஸ், பெருவிரல் காயமொன்றுக்கு மத்தியில் மூன்றாமிடத்தை குறித்த ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றிருந்தார்.
இந்நிலையிலேயே, அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது 100, 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கப் போவதாக ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ் தெரிவித்ததாக இன்சைட்கேம்ஸ் இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ், தனது நான்காவதும் இறுதியுமாக அமையக்கூடிய அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 22 செக்கன்களுக்குள் போட்டித் தூரத்தைக் கடப்பதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago