2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

அத்லெட்டிகோவில் இணைந்த லுக்மன்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான அத்லாண்டாவின் முன்களவீரரான அடெமோலா லுக்மன்னை ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டானது 30.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் பெறுமதியிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுள்ளது.

அத்லாண்டாவில் 2022ஆம் ஆண்டு இணைந்த 28 வயதான லுக்மன் 55 கோல்களைப் பெற்றதுடன், 27 கோல்களைப் பெற உதவியுள்ளார்.

அத்லாண்டாவுடன் ஒப்பந்தமொன்றை இணங்கியதாக திங்கட்கிழமை (02) அறிவித்த அத்லெட்டிகோ, 2030ஆம் ஆண்௺டு ஜூன் வரையில் லுக்மன் கைச்சாத்திடப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (02) உறுதிப்படுத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X