Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 29 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்கள வீரரான அல்வரோ மொராட்டா, ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டில் இணைந்துள்ளார்.
26 வயதான மொராட்டா, 2019-20 பருவகால முடிவு வரைக்கும் கடனடிப்படையிலேயே அத்லெட்டிகோ மட்ரிட்டில் இணைந்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜூலையில், இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து செல்சியின் அப்போதைய அதிக தொகையாக, 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் செல்சியில் இணைந்திருந்தார்.
செல்சிக்காக, இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகள் 47இல் விளையாடிய மொராட்டா 16 கோல்களைப் பெற்றிருந்தார். றியல் மட்ரிட்டில் இணைய முன்னர் சிறுவனாக அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக மொராட்டா விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செல்சியின் இன்னொரு முன்கள வீரரான கலும் ஹட்சன் ஒடோய், செல்சியிலிருந்து வெளியேறும் கோரிக்கையொன்றைக் கையளித்ததைத் தொடர்ந்து, அவரை விற்கத் தயாரில்லையென அவருக்கு செல்சி தெரிவித்துள்ளது.
செல்சியுடனான தனது ஒப்பந்தத்தில் இன்னும் 18 மாதங்களைக் கொண்டிருக்கின்ற 18 வயதான கலும் ஹட்சன் ஒடோயை 35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச் விரும்பியிருந்தது.
இப்பருவகாலத்தில் ஐந்து போட்டிகளில் மாத்திரமே செல்சிக்காக ஆரம்பித்திருந்த கலும் ஹட்சன் ஒடோய், எந்தவொரு பிறீமியர் லீக் போட்டியையும் ஆரம்பிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செல்சியின் பின்கள வீரரான 33 வயதான கரி காஹில்லை கைச்சாத்திட, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்சனலின் பின்கள வீரர்களான ஹெக்டர் பெல்லரின், லோரன்ட் கொஷியென்ஸ்கி, சோக்கரடீஸ் பஸ்தபோலஸ் ஆகியோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago