2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அத்லெட்டிகோ செல்கிறாரா ஜேம்ஸ் றொட்றிகாஸ்?

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான ஜேம்ஸ் றொட்றிகாஸை கைச்சாத்திடுவதில் இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் ஆர்வமாயுள்ளதுடன், குறித்த நகர்வு இடம்பெறுவதை ஜேம்ஸ் றொட்றிகாஸும் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சில் கடனடிப்படையில் இரண்டாண்டுகள் இருந்த ஜேம்ஸ் றொட்றிகாஸை நிரந்தரமாக கைச்சாத்திடும் வாய்ப்பை பயேர்ண் மியூனிச் மறுத்திருந்ததுடன், றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடேனின் திட்டங்களில் ஜேம்ஸ் றொட்றிகாஸ் இல்லை எனக் கூறப்படுகிறது.

அந்தவகையில், ஜேம்ஸ் றொட்றிகாஸை கைச்சாத்திடுவதற்கு இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி விரும்பிகின்றபோதும், அவரின் விலையானது நாப்போலிக்குச் சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையிலேயே, ஏறத்தாழ 42 மில்லியன் யூரோக்களுக்கு, ஜேம்ஸ் றொட்றிகாஸை கைச்சாத்திட அத்லெட்டிகோ மட்ரிட் கடுமையாக முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவிலிருந்து 126 மில்லியன் யூரோக்களுக்கு ஜோவா பீலிக்ஸை கைச்சாத்திட்டது உள்ளடங்கலாக 200 மில்லியன் யூரோக்களுக்கு மேல் அத்லெட்டிகோ மட்ரிட் செலுத்திருந்தபோதும், அன்டோனி கிறீஸ்மன், றொட்றி, லூகாஸ் பெர்ணாண்டஸின் விற்பனை மூலம் தேவையான நிதிகளைப் பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .