2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அரவிந்தவை முந்திய ஹெட்

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிகளின் துரத்தியெடுப்புகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையணியின் முன்னாள் ஜாம்பவனான அரவிந்த டி சில்வாவின் சாதனையை நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட் முறியடித்தார்.

கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கையணி சம்பியனானபோது டி சில்வா, அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஹெட் 137 ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றிருந்தார்.

தவிர அரையிறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் சேர்த்து 199 ஓட்டங்களை ஹெட் பெற்றிருந்த நிலையில், இதற்கு முன்னர் 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் சேர்த்து 180 ஓட்டங்களை விவியன் றிச்சர்ட்ஸ் பெற்றிருந்தமை அதிகபட்சமாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .