Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியக் கால்பந்தாட்டக் கழகமான அல்-இதிஹாட்டுடனான தனது ஒப்பந்தத்தில் இரத்தைத் தொடர்ந்து அல்-ஹிலாலில் கரிம் பென்ஸீமா இணைந்ததாக சவுதி ப்ரோ லீக் தலைவர்கள் திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளனர்.
அல்-இதிஹாட்டுடனான தனது ஒப்பந்தத்தை நீடிக்க 38 வயதான பென்ஸீமா மறுத்ததைத் தொடர்ந்தே இந்நகர்வு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அல்-இதிஹாட்டின் கடைசி இரண்டு லீக் போட்டிகளை பென்ஸீமா தவறவிட்டிருந்தார்.
ஒன்றரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பென்ஸீமாவைக் கைச்சாத்திட்டதாக அறிக்கையொன்றில் அல்-ஹிலால் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு லீக் பட்டத்தையும், அரசர் கிண்ணத்தையும் அல்-இதிஹாட்டுக்கு பென்ஸீமா பெற்றுக் கொடுத்திருந்தார். 21 போட்டிகளில் இப்பருவகாலத்தில் 16 கோல்களை பென்ஸீமா பெற்றிருந்தார்.
சவுதி லீக் புள்ளிகள் பட்டியலில் 47 புள்ளிகளைப் பெற்று, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நஸாரை ஒன்று அதிகமாகப் பெற்று முதலாமிடத்தில் அல்-ஹிலால் உள்ளது.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago