Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 10 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் பிரசவகால விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து, அடிலெய்ட்டில் அடுத்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியாவின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதலாவது போட்டியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அவர் திரும்பவுள்ளார்.
கோலியும் அவரது மனைவியுமான நடிகை அனுஷ்கா ஷர்மா புத்தாண்டளவில் தமது முதலாவது குழந்தையை எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, உடற்றகுதியை அடைந்ந பின்னர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் டெஸ்ட் குழாமில் சேர்க்கப்படவுள்ளார்.
இந்நிலையில், இரண்டு கால்களிலும் பின்தொடை தசைநார் காயத்துக்குள்ளான விக்கெட் காப்பாளர் ரித்திமான் சஹா டெஸ்ட் தொடரில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படவுள்ளது.
இதுதவிர, தோட்பட்டை காயம் காரணமாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமிலிருந்து வருண் சக்கரவர்த்தி விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக தங்கராசு நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்ஸன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago