Shanmugan Murugavel / 2025 ஜூன் 26 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஜேடன் சியல்ஸ் (5), ஷாமர் ஜோசப் (4), ஜஸ்டின் கிரேவ்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் ட்ரெவிஸ் ஹெட் 59, உஸ்மான் கவாஜா 47, அணித்தலைவர் பற் கமின்ஸ் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் புதன்கிழமை (25) ஆரம்பித்த இப்போட்டியில் பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் முதலாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் பிரண்டன் கிங்க் 23 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் றொஸ்டன் சேஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். பந்துவீச்சில் மிற்செல் ஸ்டார்க் 2, கமின்ஸ் மற்றும் ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025