Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிறிஸ்பேணில் நாளை காலை 5.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில் தொடர் சமநிலையாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் போட்டியில் இருக்கின்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகின்றது.
அதிலும் இத்தொடரில் எஞ்சியிருக்கின்ற மூன்று போட்டிகளில் இரண்டில் வென்று மற்றையதில் தோல்வியைத் தவிர்த்தாலே நேரடியாக இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும்.
அந்தவகையில் இந்தியாவின் வெற்றிக்கு அணித்தலைவர் றோஹித் ஷர்மா, சிரேஷ்ட வீரரான விராட் கோலி ஆகியோர் பெரிய இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளதுடன், ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஏனைய பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டியுள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஹர்ஷித் ரானாவை ஆகாஷ் டீப் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணியில் ஸ்கொட் போலண்டை உபாதையிலிருந்து குணமடைந்த ஜொஷ் ஹேசில்வூட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வணியைப் பொறுத்த வரையில் ஸ்டீவ் ஸ்மித்திலிருந்தான ஓட்டங்களே அவ்வணியின் குறைபாடாக தற்போதைய நிலையில் காணப்படுகிறது.
9 minute ago
24 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
27 minute ago
34 minute ago