2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Editorial   / 2019 டிசெம்பர் 25 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது மெல்பேணில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில், முதலாவது போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து தொடரை வெல்வதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு ஊக்கமளிக்கக்கூடிய செய்தியாக அவ்வணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ட்ரண்ட் போல் காயத்திலிருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்டில் விளையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

அந்தவகையில், அவுஸ்திரேலியாவின் இரண்டாவது இனிங்ஸில் அபாரமாகச் செயற்பட்ட டிம் செளதி, நீல் வக்னருடன் இணைந்து அவுஸ்திரேயாவின் மர்னுஸ் லபுஷைன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோரை குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ட்ரெண்ட் போல்ட் கட்டுப்படுத்துகிறார் என்பதிலேயே இப்போட்டியின் முடிவு தங்கியிருக்கிறது.

இதேவேளை, நியூசிலாந்தின் றொஸ் டெய்லர் தவிர்ந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் மேம்பட்ட துடுப்பாட்டப் பெறுபேறுகளை வழங்கினாலேயே வெற்றி குறித்து அவ்வணி சிந்திக்கலாம்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில், காயமடைந்த லொக்கி பெர்கியூசனை ட்ரெண்ட் போல்ட் பிரதிடுவதோடு, தொடர்ந்து ஓட்டங்களைப் பெறத் தடுமாறிவரும் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜீட் றாவலை டொம் பிளன்டல் பிரதியிடுவதோடு, சுழற்பந்துவீச்சாளர் மிற்செல் சான்ட்னெரை டொட் அஸ்டில் பிரதியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக அவுஸ்திரேலிய அணியில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டை ஜேம்ஸ் பற்றின்சன் பிரதியிடவுள்ளார். அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக் குழாம் பலமானதாகக் காணப்படுகின்ற நிலையில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜேம்ஸ் பற்றின்சன் உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .