Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், உலகின் ஏழாம்நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் உள்ளிட்டோர் தகுதிபெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் எஸ்தோனியாவின் அனெட் கொந்தாவெய்ட்டை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இலகுவாக வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை எதிர்கொண்ட ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 1-6 என முதலாவது செட்டை இழந்திருந்தார்.
எனினும், அடுத்த மூன்று செட்களையும் 6-3, 6-4, 6-2 எனக் கைப்பற்றிய அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டார்.
அந்தவகையில், இலங்கை நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், துனீஷியாவின் ஒன்ஸ் ஜபெயுரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினை உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவை தனது காலிறுதிப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை சிமோனா ஹலெப் எதிர்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், கனடாவின் மிலோஸ் றாவோனிச்சை 6-4, 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட்களில் வென்ற நடப்புச் சம்பியனும், உலகின் இரண்டாம்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் எதிர்கொள்ளவுள்ளார்.
18 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago