2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட பார்ட்டி, ஹலெப்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி, மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-7 (6-8), 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இப்போட்டியின் இரண்டு செட்களிலும் தலா இரண்டு முறை செட்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பை அஷ்லெய் பார்ட்டி கொண்டிருந்தபோதும், அதை முறியடித்து சோஃபியா கெனின் வென்றிருந்தார்.

இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-7 (8-10), 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

அந்தவகையில், இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சோஃபியா கெனினும், கர்பைன் முகுருஸாவும் சந்திக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .