2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் எதிர்ப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

   ஆசிய கிண்ண தொடரில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற 6 ஆவது லீக் ஆட்டத்தில்   இந்தியா-பாகிஸ்தான்   அணிகள் மோதின.  

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டகள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ஓட்டங்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ஓட்டங்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ஓட்டகள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களுடனும், ஷிவம் துபே 10 ஓட்டங்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை (14) ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில்“இன்றைய போட்டியில் (அதாவது நேற்று) விளையாட்டு அறம் இல்லாமல் போனது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கண்ணியத்துடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்” என பதிவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .