Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில், ஷர்மாவை 28 (16) ஓட்டங்களுடனும், ராகுலை 28 (20) ஓட்டங்களுடன் அடுத்தடுத்த ஓவர்களில் ஹரிஸ் றாஃப், ஷடாப் கானிடம் இழந்தது.
குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் மொஹமட் நவாஸிடம் சூரியகுமார் யாதவ்வும், தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் றிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் ஷடாப் கான், மொஹமட் ஹஸ்னைனிடம் வீழ்ந்தனர். குறித்த நேரத்தின் பின்னர் நசீம் ஷாவிடம் தீபக் ஹூடாவும் வீழ்ந்திருந்தார்.
இந்நிலையில் நிலைத்து நின்று இறுதி ஓவரில் ரண் அவுட்டான விராட் கோலியின் 60 (44) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
பதிலுக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலகாகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே ரவி பிஷ்னோயிடம் அஸாமை இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் யுஸ்வேந்திர சஹாலிடம் பக்கர் ஸமனை இழந்தது.
எனினும், மொஹமட் றிஸ்வான், மொஹமட் நவாஸ் மூலம் வெற்றியிலக்கை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான், நவாஸை 42 (20) ஓட்டங்களுடனும் புவ்னேஷ்வர் குமாரிடமும், றிஸ்வானை 71 (51) ஓட்டங்களுடன் பாண்டியாவிடமும் இழந்தது.
இருந்தபோதும் இறுதி ஓவரில் அர்ஷ்டீப் சிங்கிடம் ஆட்டமிழந்த ஆசிஃப் அலியின் 16 (08), குஷ்டில் ஷாவின் ஆட்டமிழக்காத 14 (11), இஃப்திஹார் அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 02 (01) ஓட்டங்களின் துணையோடு ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை பாகிஸ்தான் அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக நவாஸ் தெரிவானார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago