2025 மே 17, சனிக்கிழமை

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 228 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்ததால் போட்டி நேற்றைய தினத்திற்கு நடுவர்களால் ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, நேற்று மாலை 4.40 மணியளவில் போட்டி ஆரம்பமானது.

இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராஹுல் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி சிறந்த இணைப்பாட்டத்தை வௌிப்படுத்தியிருந்தனர்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 356 ஓட்டங்களைப் பெற்றது.

ஆட்டமிழக்காமல் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கோலி மற்றும் ராஹுல் தலா 122 மற்றும் 111 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அணித்தலைவர் ரோஹிட் சர்மா 56 ஓட்டங்களையும், சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஹா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்கள் நிறையில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஃபகார் ஜமான் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .