2025 மே 17, சனிக்கிழமை

ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய அணி வெற்றி

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்  ​நேற்று(12) இடம்பெற்ற போட்டியில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே தனது 10 ஓவர்கள் நிறைவில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய அணிக்கு சவாலாக அமைந்தார்.அதேபோல், சரித் அசலங்க 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழத்தினார். இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும், கே.எல் ராஹுல் 39 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் சரித் அசலங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .