Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சையை ஏற்படுத்துமென்பதால், கொல்கத்தா ஆடுகளத்தைப் பற்று பொதுவெளியில் எதுவிதக் கருத்துக்களையும் கூற விரும்பவில்லையென இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸின் அணித்தலைவர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கெதிரான செவ்வாய்க்கிழமை (08) போட்டியைத் தொடர்ந்தே குறித்த கருத்துகளை ரஹானே வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியின் 40 ஓவர்களில் 472 ஓட்டங்களைப் பெறப்பட்டதோடு, 10 விக்கெட்டுகளே வீழ்த்தப்பட்டிருந்தன.
கொல்கத்தா ஆடுகளப் பரமாரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும், நைட் றைடர்ஸுக்குமிடையே ஆடுகளத்தின் தன்மையை யார் தீர்மானிப்பதென்ற முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இக்கருத்து வெளியாகியுள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கோரப்பட்டிருந்தது.
இதற்கு முந்தைய சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில், ஐந்து நாள்களுக்கு தண்ணீர் விடப்படாத இரண்டு ஆடுகளங்களிலொன்றை தெரிவு செய்யுமாறு நைட் றைடர்ஸைக் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் எதையாவது உணர்ந்தால் ஐ.பி.எல்லுக்கு சொல்லுவேன் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைப்பேன் என ரஹானே கூறியுள்ளார்.
54 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
3 hours ago