2025 மே 21, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டைட்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோன் டைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐந்து மாதங்களுக்கே டைட் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வரும் டைட், ஆப்கானிஸ்தானுக்கு நகர மாட்டார் என்றபோதும் அணி எங்கும் பயணமாகும்போது பயணிக்கவுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இரண்டாம் தர சான்றிதழ் உறுதிப்படுத்தப்பட்ட பயிற்சியாளர் டைட் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கின் மெல்பேண் றெனிகேட்ஸ், அபு தாபி டி10 லீக்கின் பங்களா டைகர்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னர் டைட் பணியாற்றியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .