2025 மே 21, புதன்கிழமை

ஆப்கான் கிரிக்கெட் அணி தலைவர் இராஜினாமா

Editorial   / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காபுல்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை  நேற்று (09) அறிவித்தது. அணித்தலைவர் ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் இரண்டு மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியை ரஷித் கான் .ராஜினாமா செய்துள்ளார். 

உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது அணித்தலைவர் என்ற முறையில் தேர்வுக்குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்ததையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முஹமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .