Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி தகுதிபெற்றது.
ஆர்சனலின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி தகுதிபெற்றுள்ளது.
இப்போட்டியின் 20ஆவது நிமிடத்தில் சக வீரர் டெலி அல்லியிடமிருந்து வந்த பந்தை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் சண் ஹெயுங் மின் கோலாக்க முன்னிலை பெற்ற அவ்வணி, 59ஆவது நிமிடத்தில் டெலே அல்லி பெற்ற கோலுடன் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
குறித்த கோலை டெலே அல்லி பெற்ற சிறிது நேரத்தில், கூட்டத்திலிருந்து எறியப்பட்ட பிளாஸ்டிக் போத்தலொன்று அவரின் தலையை தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் முதற்பாதியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் கோல் காப்பாளராக செயற்பட்ட போலோ கஸனிகா, ஆர்சனலின் ஹென்றிக் மிகித்தரயான், ஆரோன் றம்சி ஆகியோரின் கோல் கம்பத்தை நோக்கியதாக உதைகளை அபாரமாகத் தடுத்திருந்தார்.
இரண்டாவது பாதியில், ஆர்சனலின் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, பியரி எம்ரிக் அபுமெயாங் ஆகியோரின் உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் கம்பத்தை நோக்கி செலுத்திய பந்தை ஆர்சனலின் கோல் காப்பாளர் பீற்றர் செக் தடுத்திருந்தார்.
இப்போட்டியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் நட்சத்திர முன்கள வீரரான ஹரி கேன் ஆரம்பத்தில் களமிறங்கியிருக்காத நிலையில், 57ஆவது நிமிடத்திலேயே களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற ஏ.எவ்.சி போர்ண்மெத் அணியுடனான காலிறுதிப் போட்டியின் 84ஆவது நிமிடத்தில், பெட்ரோ கொடுத்த பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய ஈடின் ஹசார்ட் கோலாக்கியதோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சியும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
அந்தவகையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை தமது அரையிறுதிப் போட்டியில் செல்சி எதிர்கொள்வதுடன், தமது அரையிறுதிப் போட்டியில் பேர்ட்டனை மன்செஸ்டர் சிற்றி எதிர்கொள்கிறது.
இரண்டு சுற்றுக்களாக அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியினதும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸினதும் மைதானங்களில் அடுத்த மாதம் ஏழாம் திகதி முதலாவது சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், அடுத்த மாதம் 21ஆம் திகதி இரண்டாவது சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago