2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஆர்செனல், பார்சிலோனா வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்குகிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் ஆர்செனல், பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதேவேளை செல்சி அணி போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக்கில் தனது முதலிரண்டு குழு நிலைப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்த ஆர்செனல் அணி, பெயார்ண் முனிச் அணிக்கெதிராக 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் 75வது நிமிடத்தில் தியோ வோல்கோட்டுக்கு பதிலாக களமிறங்கிய ஒலிவர் ஜிரௌட் தலையால் முட்டி ஒரு கோலையும், ஆட்டம் முடியும் இறுதி நிமிடத்தில் ஒஸில் ஒரு கோலினையும் பெற்றார். இந்தப்போட்டியின் மூலம் பெயார்ண் முனிச் அணி தொடர்ச்சியாக பெற்று வந்த 12 வெற்றிகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, பேட் பொரிசோவ் அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், 17வது நிமிடத்தில் செர்ஜி ரொபேர்ட்டோ காயமடைய களமிறங்கிய இவான் ராக்டிக்கே இரு கோல்களையும் பெற்றிருந்தார். போட்டியின் 48வது நிமிடத்தில் நெய்மரிடம் இருந்து பந்தைப் பெற்றும், மீண்டும் 64வது நிமிடத்தில் மீண்டும் நெய்மரிடம் இருந்து பந்தைப் பெற்றும் கோல்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை செல்சி, டைனமோ கிவ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில் இரு அணிகளும் கோலெதனையும் பெறாதநிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .