Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது இலங்கை நேரப்படி நாளை காலை 9.10 மணிக்கு கன்பெராவில் ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று ஏற்கெனவே தொடரை இழந்துள்ள இந்தியா, தொடரில் முதலாவது வெற்றியை நோக்கி எதிர்பார்ப்பதுடன், குழாமிலுள்ள ஏனைய வீரர்களை சோதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், ஷர்துல் தாக்கூர், தங்கராசு நடராஜன், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோரில் குறைந்தது மூன்று பேராவது இப்போட்டியில் விளையாடும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக, அவுஸ்திரேலியாவில் டேவிட் வோணர் காயமடைந்துள்ள நிலையில் அவரை மத்தியூ வேட் பிரதியிடுவதோடு, ஓய்வளிக்கப்பட்டுள்ள பற் கமின்ஸுக்குப் பதிலாக ஷோன் அபொட் விளையாடும் வாய்ப்பு காணப்படுகின்றது. தவிர, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட்டுக்குப் பதிலாக டேனியல் சாம்ஸ், அன்றூ டை ஆகியோரும் விளையாடும் காணப்படுகிறது.
இதேவேளை, கிளென் மக்ஸ்வெல்லுக்குப் பதிலாக கமரொன் கிறீன் அறிமுகத்தை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில், இப்போட்டியில் தோற்றால் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு இந்தியா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago