2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆஷஸைத் தக்க வைத்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா தக்க வைத்துள்ளது.

தமது நாட்டில் இடம்பெற்றிருந்த 2017-18 ஆஷஸ் தொடரை வென்றிருந்த அவுஸ்திரேலியா, மன்செஸ்டரில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்டை வென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என முன்னிலை பெற்ற நிலையிலேயே ஆஷஸை அவுஸ்திரேலியா தக்க வைத்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 497/8 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 211, மர்னுஸ் லபுஷைன் 67, டிம் பெய்ன் 58, மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/97, ஜேக் லீச் 2/83, கிரேய்க் ஒவர்ட்டன் 2/85)

இங்கிலாந்து: 301/10 (துடுப்பாட்டம்: றோறி பேர்ண்ஸ் 81, ஜோ றூட் 71, ஜொஸ் பட்லர் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 4/57, பற் கமின்ஸ் 3/60, மிற்செல் ஸ்டார்க் 3/80)

அவுஸ்திரேலியா: 186/6 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 82, மத்தியூ வேட் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொவ்ரா ஆர்ச்சர் 3/45, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/54)

இங்கிலாந்து: 197/10 (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 53, ஜொஸ் பட்லர் 34, ஜேஸன் றோய் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/43, ஜொஷ் ஹேசில்வூட் 2/31, நேதன் லையன் 2/51)

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .