Editorial / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கு அணிக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா தன்வசம் தக்கவைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடறில் 3-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலையில் உள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 109, உஸ்மான் கவாஜா 82, மிட்செல் ஸ்டார்க் 54 ஓட்டங்களை சேர்த்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 87.2 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 83, ஜோப்ரா ஆர்ச்சர் 51 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
85 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 66 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்தது.
ஜேக் வெதரால்டு 1, மார்னஷ் லபுஷேன் 13, உஸ்மான் கவாஜா 40, கேமரூன் கிரீன் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 142, அலெக்ஸ் கேரி 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 84.4 ஓவர்களில் 349 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
டிராவிஸ் ஹெட் 219 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 170 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஜோஷ் டங் பந்தில் அவுட் ஆனார். அலெக்ஸ் கேரி 128 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேறினார்.
ஜோஷ் இங்லிஷ் 10, கேப்டன் பாட் கம்மின்ஸ் 6, நேதன் லயன் 0, ஸ்காட் போலண்ட் 1 ஓட்டங்களில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்களையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 435 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்தது. பென் டக்கெட் 4, ஆலி போப் 17 ஓட்டங்களில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸாக் கிராவ்லியுடன் இணைந்த ஜோ ரூட் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். 78 ஓட்டங்கள் சேர்த்த இந்த ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார்.
ஜோ ரூட் 63 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் 56 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 18 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
தனது 21-வது அரை சதத்தை கடந்த ஸாக் கிராவ்லி 151 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 63 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 2, வில் ஜேக்ஸ் 11 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 228 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது.
11 minute ago
19 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
35 minute ago
38 minute ago