Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூலை 06 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இந்தியா பயணிக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், பேர்மிங்ஹாமில் புதன்கிழமை (02) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா அணித்தலைவர் ஷுப்மன் கில்லின் 269, இரவீந்திர ஜடேஜாவின் 89, யஷஸ்வி ஜைஸ்வாலின் 87, வொஷிங்டன் சுந்தரின் 42 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 587 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷொய்ப் பஷிர் 3, கிறிஸ் வோக்ஸ் 2, ஜொஷ் டொங் 2, ஜோ றூட், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், பிறைடன் கார்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மொஹமட் சிராஜ் (6), ஆகாஷ் டீப்பிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் ஜேமி ஸ்மித்தின் ஆட்டமிழக்காத 184, ஹரி ப்றூக்கின் 158 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 407 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, கில்லின் 161, ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 69, றிஷப் பண்டின் 65, லோகேஷ் ராகுலின் 55 ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 427 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.
அந்தவகையில் 608 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து, மொஹமட் சிராஜ், ஆகாஷ் டீப்பிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ஒலி போப் 24 ஓட்டங்களுடனும், ப்றூக் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago