2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக்கெதிராக 96 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 96 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் லீட்ஸில் வெள்ளிக்கிழமை (20) ஆரம்பித்த இப்போட்டியின் மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றது. ஒலி போப் 106, ஹரி ப்றூக் 99, ஜேமி ஸ்மித் 40, கிறிஸ் வோக்ஸ் 38, பிறைடன் கார்ஸ் 22, ஜொஷ் டொங்க் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5, பிரசீத் கிருஷ்ணா 3, மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஷுப்மன் கில் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக சாய் சுதர்ஷன் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில் பிறைடன் கார்ஸ், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X