Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 10 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியா ஏற்கெனவே வென்ற நிலையில், கட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்ற நிலையிலேயே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை இந்தியா உறுதி செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜோ றூட்டின் 69 (72), பென் டக்கெட்டின் 65 (56), லியம் லிவிங்ஸ்டோனின் 41 (32), அணித்தலைவர் ஜொஸ் பட்லரின் 34 (35), ஹரி ப்றூக்கின் 31 (52) ஓட்டங்களோடு 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 3 மற்றும் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 305 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 119 (90), ஷுப்மன் கில்லின் 60 (52), ஷ்ரேயாஸ் ஐயரின் 44 (47), அக்ஸர் பட்டேலின் ஆட்டமிழக்காத 41 (43) ஓட்டங்களோடு 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜேமி ஒவெர்ட்டன் 2, லிவிங்ஸ்டோன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷர்மா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago