2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் போராடும் இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்தியா போராடுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்ற நிலையில், மன்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா சாய் சுதர்ஷனின் 61, யஷஸ்வி ஜைஸ்வாலின் 58, றிஷப் பண்டின் 54, லோகேஷ் ராகுலின் 46, ஷர்துல் தாக்கூரின் 41, வொஷிங்டன் சுந்தரின் 27 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 5, ஜொஃப்ரா ஆர்ச்சர் 3, லியம் டோஸன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜோ றூட்டின் 150, ஸ்டோக்ஸின் 141, பென் டக்கெட்டின் 94, ஸக் குறோலியின் 84, ஒலி போப்பின் 71, பிறைடன் கார்ஸின் 47, டோஸனின் 26 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 669 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் இரவீந்திர ஜடேஜா 4, ஜஸ்பிரிட் பும்ரா 2, வொஷிங்டன் சுந்தர் 2, அன்ஷுல் கம்போஜ் 1, மொஹமட் சிராஜ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா, நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ராகுல் 87 ஓட்டங்களுடனும், கில் 78 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் வோக்ஸ் வீழ்த்தியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .