Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், லிவர்பூல், ஆர்சனல், எவெர்ற்றன் உள்ளிட்ட அணிகள் வென்றன.
தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் 20ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனே வழங்கிய பந்தை தமது முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங் தலையால் முட்டிக் கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மத்தியகளவீரரான தான்கி என்டொம்பலே வழங்கிய பந்தை அவ்வணியின் முன்களவீரரான எரிக் லமெலா கோலாக்கிய நிலையில் அவ்வணி முன்னிலை பெற்றது.
எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்ரூனே வழங்கிய பந்தை அவரின் சக முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ கோலாக்க மன்செஸ்டர் சிற்றி மீண்டும் முன்னிலை பெற்றது.
பின்னர், மாற்று வீரராகக் களமிறங்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான லூகாஸ் மோரா, எரிக் லமெலாவிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கி மீண்டும் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
இந்நிலையில், மேலதிக நேரத்தில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான கப்ரியல் ஜெஸூஸ் வெற்றிக் கோலைப் பெறப்பட்டதாகக் கருதப்பட்டபோதும், கோல் பெறப்படுவதற்கு முன்னதாக மன்செஸ்டர் சிற்றியின் பின்கள்வீரரான அய்மரிக் லபோர்ட்டேயின் கையில் பந்து உரசிச் சென்றது காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு மீளாய்வில் தெரியவர அக்கோல் நிராகரிக்கப்பட்ட போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இதேவேளை, செளதாம்டனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, றொபேர்ட்டோ ஃபெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி இங்ஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற பேர்ண்லியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, பியரி-எம்ரிக் அபுமெயாங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற வட்ஃபேர்ட்டுடனான போட்டியில், பேர்ணார்ட்டின் கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
4 hours ago