Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 20 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது லீட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் தோல்வி, இரவிச்சந்திரன் அஷ்வின், றோஹித் ஷர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பிறகு களமிறங்கும் இந்திய அணி எவ்வாறு இங்கிலாந்தைச் சமாளிக்கப் போகின்றது என்கிறது கேள்விக்குறியாகக் காணப்படுகிறது.
இந்திய அணியின் மூன்றாமிடத்தில் கருண் நாயர் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுவதோடு, ஏழாமிடத்தில் நிதிஷ் குமார் ரெட்டியும், ஜஸ்பிரிட் பும்ராவோடு மொஹமட் சிராஜ், பிரசீத் கிருஷ்ணாவோடு குல்தீப் யாதவ் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக ஜேக்கப் பெத்தெல்லின் மீள்வருகையின் பின்னரும் ஒலி போப் தக்க வைக்கப்பட்டாலும் அவரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படும்.
இத்தொடரைப் பொறுத்த வரையில் ஜோ றூட், ஜஸ்பிரிட் பும்ராவிலேயே அவ்வணியின் வெற்றி வாய்ப்புகள் பெரும்பாலும் தங்கியுள்ளன.
இங்கிலாந்து: 1. ஸக் குறோலி, 2. பென் டக்கெட், 3. ஒலி போப், 4. ஜோ றூட், 5. ஹரி ப்றூக், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), 8. கிறிஸ் வோக்ஸ், 9. பிறைடன் கார்ஸ், 10. ஜொஷ் டொங்க், 11. ஷொய்ப் பஷிர்.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: 1. லோகேஷ் ராகுல், 2. யஷஸ்வி ஜைஸ்வால், 3. கருண் நாயர், 4. ஷுப்மன் கில், 5. றிஷப் பண்ட், 6. இரவீந்திர ஜடேஜா, 7. நிதிஷ் குமார் ரெட்டி, 8. ஜஸ்பிரிட் பும்ரா, 9. குல்தீப் யாதவ், 10. மொஹமட் சிராஜ், 11. பிரசீத் கிருஷ்ணா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
46 minute ago
54 minute ago