Shanmugan Murugavel / 2016 நவம்பர் 16 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (ஐ.சி.சி) மோசடிகளைத் தடுப்பதற்கான வழியாக, சந்தேகிக்கப்படும் வீரர்களின் சமூக ஊடக இணையத்தளங்களும் ஏனைய தனிப்பட்ட சாதனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி ஊழல் எதிர்ப்புப் பிரிவின் புதிய திட்டத்தின்படி, வட்ஸ்அப், ஸ்னப்சற் போன்ற அலைபேசி செயலிகளின் தனிப்பட்ட செய்திகளையும் சமூக ஊடக இணையத்தளங்களின் செய்திகளையும் தரவிறக்கம் செய்யும் அதிகாரம், ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
ஏற்கெனவே டென்னிஸ் சார்பாகக் காணப்படும் நடைமுறைகளே, இங்கும் பின்பற்றப்படவுள்ளன. தற்போதுள்ள நடைமுறையில், வீரர்களின் அலைபேசி அழைப்பு விவரங்களை, ஐ.சி.சி கோருவதற்கு மாத்திரமே வழிவகை காணப்படும்.
அடுத்தாண்டு ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த மாற்றம் அங்கிகரிக்கப்பட்டாலேயே, இவை நடைமுறைக்கு வரவுள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago