2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இத்தாலிய சீரி ஏ தொடர்: றோமாவைத் தோற்கடித்த இன்டர் மிலன்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற றோமாவுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.

இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ் இரண்டு கோல்களையும், ஹகன் கல்ஹனொக்லு, மார்க்கஸ் துராம், நிகொலோ பரெல்லா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றோமா சார்பாக ஜலூக்கா மன்சினி, லொரென்ஸோ பெல்லகிரினி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் உள்ளது. 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலன் உள்ளதுடன், 62 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் நாப்போலியும் 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் கொமோவும் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட இன்டர் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .